மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.37லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய அங்கன்வாடி மையம், நியாய விலை கடை - அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

 
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பெரிச்சி வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவை தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு தலைவர் முத்தையன், குழந்தைகள் நலதிட்ட அலுவலர் உஷாராணி, ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மியநாயக்கண்பட்டி கிராமத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.20 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்தார். இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட தாக கிராம மக்கள் நன்றி கூறினர். 

ஆதனூர் ஊராட்சியில் உணவு தானியக் கிடங்கு



தொடர்ந்து ஆதனூர் ஊராட்சியில் ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு தானியக் கிடங்கினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார், ஊராட்சி செயலர் மாணிக்கம், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தவசதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Minister P. Murthy inaugurated a 1 lakh liter reservoir near Palamedu

புதியது பழையவை

தொடர்பு படிவம்