மதுரை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்
அலங்காநல்லூர், செப்.3- மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் குமாரம் பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், வாடிப்பட்டி காளிதாஸ், கொரியர் கணேசன், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் பேசுகையில். புரட்சித்தலைவி அம்மாவிற்கு பின் அதிமுக அழிந்து விடும் என திமுகவினர் நினைத்தனர். ஆனால் எடப்பாடி யார் தலைமையிலான அதிமுக தற்போது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. 2 கோடியே 34 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த பெருமை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சேரும். அன்று எல்லோருடைய நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று சிறப்பான ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். மாநாடு வெற்றியை திமுகவால் பொருத்துகொள்ள முடியவில்லை. அதனால் தான் புளியோதரை குற்றச்சாட்டை முன்வைத்தனர். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் மக்களின் நன்மதிப்பை பெற்று மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
நமக்கெல்லாம் சந்தோச செய்தியாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவிற்கு எடப்பாடியர் ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மீண்டும் மத்தியிலே நரேந்திர மோடி பிரதமாவார். மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சர் ஆவார். திமுகவின் ஆட்சி காலம் விரைவில் முடிவுக்கு வரும். எனவே தேர்தல் பொறுப்பாளர்கள் சுறுசுறுப்போடு பணியாற்றி 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கிளை கழக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்த படிவங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வருகை தந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரம்மாண்ட அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்யா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிங்கராஜ பாண்டியன், கூட்டுறவு தலைவர் அதலை மலர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அம்மு லோகேஸ்வரன், கிளைச் செயலாளர் ராகுல், ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், நிர்வாகிகள் சாமிநாதன், சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை

தொடர்பு படிவம்