Kottaimedu Chakradharvar Temple Kumbabhishekam Festival

அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு சுதர்சன சங்கு சக்கரத்தாழ்வார் கோவில் மகா கும்பாபிஷேக விழா



மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஶ்ரீ சுதர்சன சங்கு சக்கரத்தாழ்வார் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த விழாவில் 4 கால யாக பூஜையுடன் கணபதி ஹோமம்,  மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதாளம் முழங்க கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மரியாதைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்