அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை தொடங்குவது சம்பந்தமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில்
 வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் பேசினார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. போதிய கரும்பு வரத்து இல்லலாதால் இந்த ஆலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு அரவை செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆலை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் நிர்வாகம் திணறியது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

ஆலோசனைக் கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியபோது

இதையடுத்து ஆலை இயக்குவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், கூடுதல் ஆணையர், சர்க்கரை துறை அலுவலர் அன்பழகன், வேளாண் துறை முதன்மை செயலர் சமயமூர்த்தி, வேளாண் வணிக இயக்குனர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலை அரவை தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் 40 நாட்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கரும்பு தொழில் நலிவுற்றதற்கு காரணமே விவசாயிகள் கரும்புகளை தனியார் ஆலைக்கு விற்றதன் விளைவு தான் இந்த ஆலை இயங்காமல் போனதற்கு காரணமாக உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை அனைத்தும் கொடுக்கபட்டுவிட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிரிடுகின்றனர். 

4.5 லட்சம் டன் கரும்பு இருந்தால் மட்டுமே ஆலையை தொடர்ந்து இயக்க முடியும், ஆனால் தற்போது 30 ஆயிரம் டன் கறும்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இப்படி இருந்தால் 10 நாள் கூட தொடர்ந்து ஆலை இயக்க முடியாது. ஆலை இயங்க என்னென்ன பிரச்சினை உள்ளது மெஷின் கோளாறு உள்ளதா என ஆய்வு செய்ய தனி குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அனைத்து விபரங்களையும் சேகரிக்கப்பட்டு வருகிறோம். விரைவில் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்க்கரை துறை சீராக வேண்டும் எனில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தேவை. எனவே பொறுத்திருந்து விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டு ஆலைக்கு அதிகளவில் கரும்பு பதிவு செய்து ஆலை இயங்க ஒத்துழைக்க வேண்டும். அடுத்த அரவை பருவத்திற்கு விவசாயிகள் தயாராக வேண்டும் என கேட்டுகொண்டார். தொடர்ந்து ஆலை இயங்கும் பட்சத்தில் பிற்காலத்தில் ஆலையில் எத்தனால் பிளான்ட் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் ஆலை மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமாரி, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன் பேராட்சி பிரேமா ஒன்றியக்குழு தலைவர் பஞ்சு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டியன், இளைஞரணி சந்தனகருப்பு, தனிசியம் மருது, மாணவரணி பிரதாப், யோகேஷ், மற்றும் ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்