மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியபட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பாக காமராஜ் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளியின் தலைவர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரவி, செயலாளர் ரமேஷ், பொருளாளர் மாதவன், ராஜா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் உறவின்முறை சங்க தலைவர் கனகராஜ், துணைதலைவர் சிவாஜி, செயலாளர் அருணாசல வேல் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் பாலமேடு வட்டார காங்கிரஸ் சார்பில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்

தொடர்ந்து அங்குள்ள கலை அரங்கத்தில் பள்ளி மாணவர்களின் நடனம், பேச்சுப்போட்டி, கவிதை, வில்லுப்பாட்டு, பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. 

மேலும் அலங்காநல்லூர் பாலமேடு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக வட்டார தலைவர் சுப்புராயல் , காந்தி, நகர் தலைவர் வைரமணி, மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி வட்டார தலைவர் சரந்தாங்கி முத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மண்டல் தலைவர் தங்கதுரை தலைமையில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி முன்னிலையில் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, ஒன்றிய தலைவர் தங்கதுரை மண்டல் பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், சங்கர் கணேஷ், மகளிர் அணி முனீஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதை போல பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்