முடுவார்பட்டி கிராமத்தில் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மதுரை மாவடடம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் அழகுராஜா தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் பிரபு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுந்தராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கரன், கிளை செயலாளர் நாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பரணி, விஜி, முருகன், டிரைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

புதியது பழையவை

தொடர்பு படிவம்