அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது வருகின்ற 25 ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அலங்காநல்லூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர் பி.மூர்த்தி தகவல்


குலமங்கலம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர் பி.மூர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கிராம பகுதிகளில் மக்களைச் சந்தித்து அரசு அதிகாரிகள் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்டம் தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்குளம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அணிஷ்சேகர் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


குலமங்கலம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றியச் செயலாளர் சிறைசெல்வம், மாவட்ட சேர்மன் சூரியகலா கலாநிதி, யூனியன் சேர்மன் வீரராகவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மக்கள் தொடர்பு முகாமில் மொத்தம் 479 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரத்து 971 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது. குளமங்குலம் ஊராட்சி காயாம்பட்டி கிராமத்தில் 54 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சி அமைத்த ஓராண்டிற்குள் 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதை உடனே சரி செய்து கொடுக்கும் அரசு திமுக அரசு. கடந்த பத்தாண்டு காலத்தில் செய்ய முடியாத பலவற்றை இந்த ஓராண்டிற்குள் பல்வேறு நிதி நெருக்கடியிலும் திமுக அரசு செய்து வருகிறது. அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவிரைவில் மீண்டும் இயங்குவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. 

வருகின்ற 25ம் தேதி வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் சர்க்கரை ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தவறு செய்யும் அரசு அதிகாரிகள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கடந்த எட்டு மாதங்களில் வணிகவரி துறையும், பதிவுத் துறையும் வரலாறு காணாத அளவில் அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனை. 

சார்பதிவாளர் பணியிட மாறுதல் தொடர்பாக என் மீது சுமத்திய குற்றச்சாட்டை பாஜக தலைவர் அண்ணாமலை நிரூபித்தால் நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார். இல்லையென்றால் அவர் பதவியை விட்டு விலக தயாரா? வணிக வரியில் வரி கட்டாமல் ஏமாற்றும் நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜாராம், மாவட்ட கவுன்சிலர்கள் நேரு பாண்டியன், சித்ராதேவி முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருதுபாண்டியன், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய் துறையினர், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறையினர், மகளிர் சுய உதவிக் குழுவினர், குழந்தைகள் நலத்துறை, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்