அலங்காநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது அலங்காநல்லூர், நவ.27- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் அரிமா சங்கம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதற்கு அரிமா சங்க தலைவர் தயாளன் தலைமை தாங்கினார்.
அரிமா சங்க பொருளாளர் கண்ணன் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் காட்வின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் அசோக்குமார், சமூக சேவகர் செந்தில் குமார், அலங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் மற்றும் அரிமா சங்க மூத்த உறுப்பினர்கள் ரகுபதி, நடராஜன், கோவிந்தராஜ், சோமசுந்தரம், மனோகரவேல் பாண்டியன், முரளிதரன், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன், மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அலங்காநல்லூர், ஐயப்பன் கோவில் முதல் கேட்டுகடை சந்திப்பு வரை சென்று மீண்டும் அலங்காநல்லூர் பேரூராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. தலைகவசம் அணிவதன் அவசியம், பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
புதியது பழையவை

தொடர்பு படிவம்