மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா, யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா மற்றும் யூனியன் அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி ஆகியோர் தலைமையில் மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி முன்னிலையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 

மேலும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அ.கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன் தலைமையில் துணைத் தலைவர் முருகன் முன்னிலையில் ஊராட்சி செயலர் ராஜா தீர்மானங்களை வாசித்தார். அய்யூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார்.

எர்ரம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் துணை தலைவர் ருக்குமணி கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் ஊராட்சி செயலர் முத்துகுமார் தீர்மானங்களை வாசித்தார். முடுவார்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி தலைமையில் துணைத் தலைவர் உமா, யூனியன் அலுவலர் மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் வீரன், முன்னிலையில் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். 


தேவசேரி  ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி சசி தலைமையில் துணை தலைவர் கண்ணன் முன்னிலையில் ஊராட்சி செயலர் அழகுமீனா தீர்மானங்களை வாசித்தார். அச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஶ்ரீசுதா முருகன் தலைமையில் துணை தலைவர் ஜெயகனேசன் முன்னிலையில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார்.  

இதேபோன்று வைரவநத்தம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மருதுபாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குறவன்குளம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் எல்.இ.டி டிவி வழங்கினார். மேலும் பள்ளியில் பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாஜக சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன் குமார் மரக்கன்றுகள் வழங்கினார். இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்