*அலங்காநல்லூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது*
பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம் அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம் என்ற தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கத்தில் மாநகராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அவர்களின் பொறுப்பும், பங்கும் குறித்த புரிதலை உருவாக்கி பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பயிற்சி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று அலங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இப்ப பயிற்சியில் அலங்காநல்லூர், பாலமேடு, பரவை பேரூராட்சிகளை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.
மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆலோசனையின்படியும் பயிற்சியானது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் உமா, செந்தில்வேல் குமரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ் ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கருத்தாளர்களாக மாநில அளவில் நடைபெற்ற முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி சமுதாய அமைப்பாளர் பிச்சை, பிரபு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் காமராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் நோக்கமானது மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மற்றும் வலுப்படுத்தும் விதமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாகும். இந்த முகாமில் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன் பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ், மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர். அரசு பள்ளிகளை வளப்படுத்தும் நோக்கத்துடன் அளிக்ககப்படும் பயிற்சியானது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி உள்ளாட்சி பேரூராட்சி பிரதிநிதிகள் 322 உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அந்தந்த ஒன்றியங்களில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை

தொடர்பு படிவம்